காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 72 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

0 1509
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 72 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 72 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் கடந்த மாதத் தொடக்கத்தில் பெய்த மழையால் ஏற்கெனவே நிரம்பியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகத்தின் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு 72 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments