பல விவகாரங்களில் சாராம்சம் தெரியாமலேயே சூர்யா பேசுகிறார் - ராதாரவி
நீட் தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சாராம்சம் தெரியாமலேயே நடிகர் சூர்யா பேசுவதாக குற்றம்சாட்டிய ராதாரவி, இது போன்று முழு விபரங்கள் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் பிரதமர் மோடி பிறந்தநாளை ஒட்டி, பாஜக சார்பில் ஏழை எளியோருக்கு பிரியாணி வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்ட காரணத்தினால் நடிகர் சங்கம் உருப்படாது எனத்தெரிவித்தார்.
Comments