அமெரிக்க போர் விமான தளத்தை தாக்குவது போன்ற புனைவு வீடியோ சீன ராணுவம் வெளியீடு

0 3080
அமெரிக்க போர் விமான தளத்தை தாக்குவது போன்ற புனைவு வீடியோ சீன ராணுவம் வெளியீடு

அமெரிக்காவின் விமானப்படைத் தளத்தை தனது அணு ஆயுத போர் விமானங்களால் தாக்குவது போன்ற புனைவு காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை சீன ராணுவம் வெளியிட்டுள்ளது.

தைவான் தலைநகர் தைபேய்க்கு மூத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் பயணம் செய்ததால் சீனா ஆத்திரம் அடைந்துள்ளது.

இதை அடுத்து தனக்கு சொந்தமான பகுதி என உரிமை கொண்டாடும் தைவான் பகுதிகளுக்கு அருகே சீனா போர் ஒத்திகைகளை நடத்துகிறது.

இந்த நிலையில், பசிபிக் தீவான குவாமில் உள்ள அமெரிக்காவின் ஆண்டர்சன் விமானப்படைத் தளத்தை தனது H-6 பாம்பர்கள் வாயிலாக தாக்குவது போன்ற வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது.

2 நிமிடம் ஒடும் இந்த வீடியோ சீன ராணுவத்தின் Weibo இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments