தப்லீக் ஜமாத் மாநாடு தான் இந்தியாவில் கொரோனா பரவ காரணம் - மத்திய அரசு
அரசின் கட்டுப்பாட்டை மீறி டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாடு தான், நாட்டில் பலருக்கு கொரோனா தொற்று பரவ காரணம் என மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
சிவசேனா எம்பி ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி இதைத் தெரிவித்துள்ளார்.
தொற்று பரவிய தகவல் கிடைத்ததும், தப்லீக் ஜமாத் கட்டித்தில் இருந்து 2361 பேர் டெல்லி போலீசால் வெளியேற்றப்பட்டதாகவும், 233 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக 36 நாடுகளை சேர்ந்த 965 பேர் மீது 59 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Delhi Police arrested 233 Tablighi Jamaat members and 2,361 people have been evacuated from the organisation's headquarters in Delhi's Nizamuddin locality since March 29: Union Home Ministry
— Press Trust of India (@PTI_News) September 21, 2020
Comments