அப்பாவி சிறுவன் ஆன்லைன் கல்விக்காக ஏக்கம்.... திருடனாக மாற்றிய இளைஞர்கள்! - திருத்திய போலீஸ் அதிகாரி

0 3770

ன்லைன் கல்வி கற்க திருடனாக பாதை மாறிய சிறுவனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து வழி நடத்திய காவல் பெண் ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

சென்னை பழைய வண்ணாரப் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 8 - ஆம் வகுப்பு படித்து வந்தான். படிப்பில் ஆர்வம் கொண்ட ரஞ்சன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். கொரோனா காரணமாக தற்போது ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஆன்ட்ராய்ட் செல்போன் இல்லாத காரணத்தினால், பாடங்களைப் படிக்க முடியாமல் சிறுவன் சிரமப்பட்டு வந்துள்ளான்.

இதனால், தன் வீட்டின் அருகேயுள்ள இளைஞர்களிடத்தில், பழைய செல்போன் தாருங்கள் என்று கேட்டிருக்கிறான். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றுமு ராஜி என்பவரும் சேர்ந்து, 'எங்களுடன் வா செல்போன் வாங்கித் தருகிறேன்' என சிறுவனை திருவொற்றியூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே, கான்கார் பகுதி மேம்பாலம் அருகே லாரி ஒட்டுனரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர் .image

இதனைக் கண்ட பொதுமக்கள் இளைஞர்களை துரத்தி உள்ளனர். இளைஞர்கள் இருவரும் தப்பிச் சென்று விட சிறுவன் மட்டும் சிக்கிக் கொண்டுள்ளான். பிடிபட்ட சிறுவனை பொதுமக்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி சிறுவனிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்டார்.

ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் திருட முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனுக்கு ரூ. 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுக்க திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி முன்வந்தார். சிறுவனின் மனநிலையை மாற்றும் விதமாக அவனுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து பாடத்தில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர் புவனேஸ்வரிக்கு  சென்னை மாநகர ஆணையர் மகேஷ் அகர்வால் பாராட்டை தெரிவித்துள்ளார்.

சிறுவனை திருட்டில் ஈடுபட வைத்த மணிகண்டன் மற்றும் ராஜி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments