சீனாவில் நவம்பர் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி
உலகில் அதிக மக்கள் தொகை நாடாக திகழும் சீனா வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கவுள்ளது.
சீன அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. அதன்படி கடைசியாக நடத்தப்பட்ட 6ஆவது கணக்கெடுப்பு விவரங்கள், அந்நாட்டில் 137 கோடி பேர் (1.37 billion) இருப்பதாக தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் 7ஆவது முறையாக கணக்கெடுப்பு நடத்த இருப்பதாகவும், இப்பணியில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் (over seven million population census staff) ஈடுபட இருப்பதாகவும் சீன தேசிய புள்ளியியல் துறை அறிவித்துள்ளது.
Comments