சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்குக் கிருஷ்ணா நீர் வந்தடைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.
தெலுங்கு கங்கைத் திட்டத்தின்படி கிருஷ்ணா ஆற்று நீர் கால்வாய் வழியாகக் கண்டலேறு அணைக்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பூண்டி ஏரிக்குத் திறந்துவிடப்படும்.
இந்த நீர் கண்டலேறு - பூண்டி கால்வாய் வழியாக நேற்றிரவு 9 மணி அளவில் தமிழக எல்லைப் பகுதியான ஊத்துக்கோட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு இன்று காலை தண்ணீர் வந்தடைந்தது.
Comments