மருத்துவ மாணாக்கர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் 3 மாதப் பயிற்சி கட்டாயம் - மத்திய அரசு
முதுநிலை மருத்துவப் படிப்பு மாணாக்கர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில், கட்டாயம் 3 மாதங்கள் பயிற்சி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள புதிய மருத்துவக் கல்வி விதிமுறைகளின் கீழ், எம்.எஸ் அல்லது எம்.டி முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதுவதற்கு முன்பு, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் பணியாற்றுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சிறப்பு பிரிவு மருத்துவர்களின் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments