இங்கிலாந்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் நுழைந்த வினோத ஆடு

0 1249
இங்கிலாந்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் நுழைந்த வினோத ஆடு

இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டின்போது அல்பாகா இனத்தைச் சேர்ந்த ஆடு மைதானத்தில் புகுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

வெஸ்ட் யார்க்சயர் பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அல்பாகா ஆடு மைதானத்தில் புகுந்தது.

உடல் முழுவதும் அடர்ந்த ரோமத்துடன் இருந்த அந்த வினோத விலங்கை விளையாட்டு வீரர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மைதானத்தில் இருந்து எப்படி வெளியேறுவது எனத் தெரியாமல் சுற்றிச் சுற்றி வந்த அல்பாகா ஒரு வழியாக தானாக வெளியேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments