6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் இன்று திறப்பு
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தாஜ்மஹால், 6 மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்காக இன்று திறக்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து கொரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி, தாஜ்மஹாலுக்குள் செல்ல நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் பேருக்கும், ஆக்ரா கோட்டைக்கு செல்ல 2,500 பேருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
உரிமம் பெற்ற வழிகாட்டிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தாஜ்மஹால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ஆக்ரா கோட்டை ஞாயிற்றுக் கிழமையிலும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Agra: Thermal screening of visitors being done at Taj Mahal, as the monument reopens for public from today. pic.twitter.com/YqHR94eub8
— ANI UP (@ANINewsUP) September 21, 2020
Comments