ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி

0 2777
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 39 ரன்களும், ஸ்டோய்னிஷ் 53 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து, களமிறங்கிய பஞ்சாப் அணியில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற மயங்க் அகர்வால், 60 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். 2 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 2 ரன்களை எடுக்க, டெல்லி அணி முதல் 2 பந்துகளிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments