அமெரிக்காவில் கல்வி நிதிக்காக 5 பில்லியன் டாலர் வழங்க டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டேன்ஸ் ஒப்புதல்
அமெரிக்காவில் கல்வி நிதிக்காக 5 பில்லியன் டாலர் வழங்குவதாக டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டேன்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க 5 பில்லியன் டாலர் கல்வி நிதியை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில், தங்கள் நிறுவனம் கல்வி நிதியளிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகள் திட்டங்களைத் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளது.
முன்னதாக வால்மார்ட் மற்றும் ஆரக்கிள் உடன் இணைந்து செயல்பட்டால் அமெரிக்காவில் டிக்டாக் செயல்படத் தடையில்லை என டிரம்ப் கூறியிருந்தார்.
Comments