லடாக்கில் இன்று ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6-ம் கட்டப் பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான, ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. முதன்முறையாக மத்திய அரசு அதிகாரி ஒருவரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, இந்தியா-சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்சனை நீடித்து வருகிறது. இதுதொடர்பாக, ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் இருநாடுகளுக்கு இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், சீனா தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம், சீனாவின் அத்துமீறல்களை இந்தியாவும் தொடர்ந்து வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. அந்த வகையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே இந்திய பகுதியில் உள்ள 6 முக்கிய மலைச் சிகரங்களை இந்திய ராணுவம் சமீபத்தில் கைப்பற்றி உள்ளது. கடந்த 3 வாரங்களில் லடாக்கில் Magar hill, Gurung Hill, Recehen La, Rezang La, Mokhpari மற்றும் பிங்கர் 4 ஆகிய இடங்களை இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளது.
முக்கிய மலைச்சிகரங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, எல்லைக்கு மேலும் 3000 வீரர்களை சீன அனுப்பி உள்ளது. Rezang la மற்றும் Rechen La சிகரங்களுக்கு அருகில் சீன துருப்புகள் கனரக பீரங்கிகளுடன் அணிவகுத்துள்ளன. சீன படைகளை குவித்து வருவதை அடுத்து இந்திய ராணுவமும் துருப்புகளை எல்லையில் குவிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த சூழலில் இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை, சுஷுல்-மோல்டோ சந்திப்பு பகுதியில் இன்று நடைபெற உள்ளது.
இதில் இந்தியா தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் பங்கேற்கும் நிலையில், முதல்முறையாக மத்திய அரசு தரப்பில் வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் நவின் ஸ்ரீவஸ்தவா பங்கேற்க உள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதியை மீட்பது, துருப்புக்களை பின்வாங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments