திருமலைக்கு வரும் வேற்று மதத்தவர்கள் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திடும் முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு

0 4147
திருமலைக்கு வரும் வேற்று மதத்தவர்கள் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திடும் முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு

திருமலைக்கு வரும் வேற்று மதத்தவர்கள் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திடும் முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி கொண்ட வேற்று மதத்தவர்கள் தரிசனத்திற்கு வரும் போது உண்மையான பக்தியுடன் தரிசனத்திற்கு செல்வதாக உறுதி கூறும் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும்.

அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும் கையெழுத்திட்ட பின்பே தரிசனத்திற்கு சென்றார். தற்போது இந்த முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி திருமலைக்கு ,வருகிற 23 ஆம் தேதி பட்டு வஸ்திரம் சமர்பிக்க வருகிறார். அதற்கு முன் உறுதி பத்திர முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments