கர்நாடக மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

0 11546
கர்நாடக மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கர்நாடக மாநிலத்தின் 3 கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

உத்திர கனரா, தென்கனரா, உடுப்பி ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யகூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

மேலும், ஷிவமொக்கா, குடகு, ஹாசன், சிக்மகளூரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் பாகல்கோட்டை, பீதர், கல புர்கி, கொப்பல், ரெய்ச்சூர், விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments