மாநிலங்களவை துணை சபாநாயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியதை அடுத்து எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
சர்ச்சைக்குரிய 2 வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருப்பினும் அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து மாநிலங்களவையை நடத்திய ஹரிவன்ஸ் அதை ஏற்காமல் குரல் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மசோதாக்கள் நிறைவேறிய நிலையில், இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தத் தகவலை தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன என்றும், ஆதலால் இன்றைய தினம் கருப்பு தினமாக அறியப்படும் என்றும் குற்றம்சாட்டினார்.
Comments