10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
நாளை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.
ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,ஹேமலதா அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதனை ஏற்று 10-ம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை, தேர்வை எதிர்கொண்ட விதம் ஆகியன குறித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு மற்றும் மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.
Comments