6 நாடுகளை சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ரஷ்யாவில் கூட்டு பயிற்சி
ரஷ்யாவில் 6 நாடுகளை சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்நாட்டின் அஸ்ட்ரகான் நகரில் நடைபெற்ற துவக்க விழாவில் நடந்த ராணுவ அணிவகுப்பை தொடர்ந்து, வான் தாக்குதலை முறியடிக்கும் பயிற்சியில் படையினர் ஈடுபட்டனர்.
வானத்தில் 11 ஹெலிகாப்டர்கள் வட்டமிட, கீழே இருந்த வீரர்கள் பீரங்கிகளில் இருந்து சுட்டவாறு பயிற்சி மேற்கொண்டனர். ரஷ்யா மற்றும் சீனா இடையிலான உறவுகளை வலுப்படுத்த, கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டு வீரர்களும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments