மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள்: எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

0 1686
மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள்: எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி,  மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் மீது காரசார விவாதம் நடைபெற்றது.

மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், தங்கள் உற்பத்தி பொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரம் விவசாயிகளுக்கு கிடைக்கும் என அவர் கூறினார்.

மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரி, திரிணமூல் எம்பி டெரக் ஓ பிரையன், திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர்  தீர்மானங்களை கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக எம்பி எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம், 2 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறி அமலுக்கு வந்தால், விவசாயிகள் விவசாய பணியாளர்களாக  மாறும் நிலை ஏற்படும் என்றார்.

மாநில அரசால் பதுக்கல், கருப்புச் சந்தையில் விற்பனை நடைபெறுதல் போன்றவற்றை தடுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். மேலும் விவசாயிகளின் நிலங்கள், மிகப்பெரிய வணிக நிறுவனங்களால் எடுக்கப்பட்டு விடும் அபாயம் இருப்பதாகவும்  எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் குற்றம்சாட்டினார்.

திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் பேசியபோது, 2 மசோதாக்களும் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், 2 மசோதாக்களும் நிறைவேறினால், விவசாயிகள் மிகப்பெரிய தொழில்நிறுவனங்களுக்கு அடிமைகளாகி விடும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.

 

திமுக எம்பி திருச்சி சிவா பேசியபோது, நாடு முழுவதும் 2 மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது செவிமடுக்காத மத்திய அரசு தற்போது அவர்களுக்கு உதவி செய்வதாக கூறுவதாக தெரிவித்தார். கொரோனா நிலவரத்துக்கு மத்தியில் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய என்ன கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments