தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய கட்டிங்கள் காணொலி மூலம் முதலமைச்சர் திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் குந்துகாலில் 70 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் 27 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் 5 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை கெல்லீஸில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுமியர் அரசினர் கூர்நோக்கு இல்லத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணையதளத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவச கல்வி மற்றும் பயிற்சி அளித்திட முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Comments