தனி ஆளாக 3 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் அமைத்த விவசாயிக்கு டிராக்டர் பரிசு வழங்கினார் ஆனந்த் மகிந்திரா
பீகாரில் தனி ஆளாக நின்று 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டிய விவசாயிக்கு, டிராக்டர் பரிசு வழங்கி ஆனந்த் மகிந்திரா அசத்தி இருக்கிறார்.
கயா மாவட்டத்தை சேர்ந்த லாங்கி புய்யன் என்ற விவசாயி, மலைப் பகுதியில் இருந்து மழை நீர் குளத்திற்கு வரும் விதத்தில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு தனி ஆளாக நின்று கால்வாய் வெட்டியுள்ளார்.
30 ஆண்டுகள் தனி ஒருவனாக நின்று அவர் செய்ததை பெருமைப்படுத்தும் விதமாக மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா டிராக்டரை பரிசாக வழங்கி இருக்கிறார்.
அதனால் மகிழ்ச்சியடைந்துள்ள லாங்கி, டிராக்டர் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
Comments