மத்தியப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்
மத்தியப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை சிலர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
இந்தூர் - அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கும் மையம் இயங்கி வந்தது. நேற்றிரவு அங்கு கும்பலாக வந்த சிலர், அங்கிருந்த தடுப்புகள், கண்ணாடி அறைகளை உடைத்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார், அதிக சுங்க கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விவசாயிகள் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
Comments