உக்ரைனில் அமெரிக்க, உக்ரைன் வீரர்கள் கூட்டு ராணுவப் பயிற்சி
இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் உக்ரைனில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய உக்ரைனின் இரு தரப்பு பயிற்சியின் போது அமெரிக்காவின் சிறப்பு நடவடிக்கைகள் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாராசூட்டில் இருந்து குதித்து பயிற்சி நடத்தினர். அவர்களுடன் உக்ரைன் வீரர்களும் MC-130J மற்றும் CV-22 ஓஸ்ப்ரே விமானங்களில் இருந்து குதித்தனர்.
கருங்கடல் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க இந்த பயிற்சி நடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக உக்ரைனும் அமெரிக்காவும் 2020 ரேபிட் ட்ரைடென்ட் என்று அழைக்கப்படும் மற்றொரு கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. அதில் 10 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments