திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
மாலை 6.03 முதல் 6.20 மணிக்குள் கருடாழ்வார் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடியை தங்கக் கொடிமரத்தில் கோவில் பிரதான அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 5 டன் மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் கோவில் அலங்கரிக்கப்பட்டது. இன்றைய முதல் நாளில் ரங்கநாயக மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தங்கத்தேரோட்டம், பெரியதேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக சர்வபூபாள வாகனத்தில் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக, பக்தர்கள் பங்கேற்பின்றி, வீதி உலா இன்றி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், கோவில் ஜீயர்கள், மற்றும் ஆலயப் பயணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments