மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள விவசாய சட்டங்களினால், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது - முதலமைச்சர் அறிக்கை

0 2945

விவசாயிகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்த மசோதாக்களால், தமிழக விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் குற்றச் சாட்டுக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் நலன் கருதி, மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். ஆனால், மு.க. ஸ்டாலின் இதனை அரசியல் ஆக்குவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை, தாம் ஒரு விவசாயி என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். தமிழக விவசாயி களின் நலன்களைக் காக்க அனைத்து  நடவடிக்கைகளையும் அதிமுக அரசு எடுக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments