பிறந்தது முதல் பால் பவுடர் மட்டுமே உண்டு வரும் மாற்றுத்திறனாளிக்கு உதவ கோரிக்கை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திட உணவு உட்கொள்ள முடியாமல் 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக உண்டு வரும் மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு உதவுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
லட்சுமாங்குடியைச் சேர்ந்த கலையரசன் என்ற தாயை இழந்த அந்தச் சிறுவனின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். பிறவிலேயே வாயமைப்பு சரியாக இல்லாமல், பார்வை குறைபாட்டோடு பிறந்த கலையரசனால் திட உணவுகள் எதுவும் எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.
கலையரசனை கவனித்துக் கொள்வதற்காகவே அவரது தம்பி கலைவாணன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்குச் சென்று வருகிறார்.
கழிவறையுடன் கூடிய வீடும் நிரந்தர வருமானத்துக்கான வேலையும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கலையரசனின் சகோதரி கோரிக்கை விடுக்கிறார்.
Comments