30 ஆண்டுகால சேவை.. இறுதி பயணம் மேற்கொள்ளும் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராத் கப்பல்..!
இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராத் குஜராத்துக்கு தனது இறுதி பயணத்தை மேற்கொள்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவை புரிந்த இந்த கப்பல், கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து விலக்கப்பட்டது.
முன்னதாக இங்கிலாந்து கடற்படையில் ஹெ.எம்.எஸ் ஹெர்மஸ் எனும் பெயரில் சேவையாற்றிய இந்த கப்பல், பிரிட்டனிலிருந்து வாங்கப்பட்ட ஒரே போர் கப்பலாகும். படையிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்து அருங்காட்சியகமாகவோ, உணவகமாகவோ மாற்ற திட்டமிடப்பட்ட நிலையில், அந்த முயற்சிகள் கைகூடாததால், அதனை உடைக்கும் ஒப்பந்தம் குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் குழுமத்துக்கு கிடைத்தது.
இதையடுத்து மும்பையிலிருந்து குஜராத்திலுள்ள அலங்க் கப்பல் உடைக்கும் தளத்துக்கு ஐஎன்எஸ் விராத் தனது இறுதி பயணத்தை மேற்கொள்கிறது.
Comments