புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்- மத்திய அரசு
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கை நெகிழ்வுத் தன்மையுடன் அமல்படுத்தப்படும் என்றும், எந்த மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்றும் மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இரு மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து கோரிக்கை ஏதும் வந்ததா, அப்படி வந்திருந்தால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஆம் என எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மும்மொழிக் கொள்கை 1968ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்று, 1986 மற்றும் 1992ஆம் ஆண்டுகளிலும் தேசிய கல்விக் கொள்கையில் தொடர்ந்தது என கூறியுள்ளார்.
இது, தற்போது புதிய தேசிய கல்விக் கொள்கையிலும் தொடர்வதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
Comments