6 மாதங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் தாஜ் மஹால்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலில் வரும் திங்கள் முதல் சுற்றுலா பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்பட உள்ளதால், ஆக்ராவில் உள்ள தங்கும் விடுதிகளை, கிருமி நாசினியால் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்பே தாஜ்மஹாலும், ஆக்ரா கோட்டையும் மூடப்பட்டன.
இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகளை முன்னிட்டு, வரும் திங்கள் முதல், அவை மீண்டும் திறக்கப்பட உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் டிக்கெட் விநியோகிக்கப்படுகிறது.
ஊரடங்கால் பல நாட்கள் வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளை வரவேற்க விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர்.
Comments