பாங்காங் சோவின் வடகரையில் 50 வீரர்களை நிறுத்தும் சீனாவின் விருப்பத்திற்க்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு
பாங்காங் சோவின் வடகரையில் சீன ராணுவ வீரர்கள் 50 பேர் தங்கியிருக்கவும், குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தவும் சீனா விரும்பும் நிலையில் அதை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சு வரும் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், அதில் வலியுறுத்த வேண்டியவை பற்றி ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி, அக்சாய் சின் ஆகியவற்றில் சீனப் படையினரை நிறுத்தியுள்ளது எல்லையில் தன் நிலையை அது வலுப்படுத்துவதையே காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறப்புப் பிரதிநிதிகள், வெளியுறவு அமைச்சர்கள் நிலையில் படைவிலக்கம் பற்றிப் பேசியுள்ள நிலையில், முன்பிருந்த நிலையைப் பராமரிக்கச் சீன ராணுவம் மறுப்பதால் அனைத்து முயற்சிகளும் வீணாகும் ஆபத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
Comments