பாதுகாப்பு ரகசியங்களை சீன பெண் உளவாளிக்கு விற்பனை செய்ய முயன்ற பத்திரிக்கையாளர் கைது
பாதுகாப்பு ரகசியங்களை, பத்திரிக்கையாளர் ஒருவரிடமிருந்து பெரும் விலை கொடுத்து வாங்க முயன்றதாக, சீனாவைச் சேர்ந்த பெண் உளவாளியும், அவரது நேபாள கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.
அதிகாரப்பூர்வ ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ராஜீவ் சர்மா என்ற ப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளரை டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு கைது செய்தது. பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய ஆவணங்களை வைத்திருந்ததோடு, அவற்றை சீன உளவாளிக்கு கைமாற்ற முயன்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்த போலீசார், ஒரு சீனப் பெண்ணையும், கூட்டாளியாக இருந்த நேபாளி ஒருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் போலி பெயரிலான நிறுவனங்கள் மூலம், பெரும் தொகையை ராஜீவ் சர்மாவுக்கு பரிவர்த்தனை செய்ததாக தெரிவித்துள்ள போலீசார், பெரும் எண்ணிக்கையில் செல்போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Comments