ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்க கால்வாய் தூர்வாரிய சிறுவன்..ரூ. 25 ஆயிரம் மதிப்பில் “TAB” பரிசளித்த காவல் துணை ஆணையர்

0 3412

சென்னையில் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்க வேண்டி கால்வாய் தூர்வாரும் வேலைக்குச் சென்ற சிறுவனின் புகைப்படம் வைரலான நிலையில், கொடுங்கையூர் போலீசார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேப் ஒன்றை பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

11ஆம் வகுப்பு படிக்கும் சாமுவேல் என்ற அந்தச் சிறுவனின் தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார்.  ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்க செல்போன் வாங்குவதற்காக சாமுவேல் கால்வாய் தூர்வாரும் வேலைக்குச் சென்றுள்ளார்.

அவர் கழிவுநீர் அள்ளும் புகைப்படம் சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டேப் ஒன்றையும் ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் வாங்கி பரிசளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments