இரவில் ஆட்டோவில் கடத்தி, மனநலம் பாதித்த பெண்ணை 5 நாள்கள் வன்கொடுமை செய்த கும்பல்!- திருச்சியில் சம்பவம்

0 18474

திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே மனநலம் பாதித்த நிலையில் மேரி என்ற பெண் சுற்றித்திரிந்துள்ளார். மருத்துவமனை அருகே உள்ள ஹோட்டல் வாசலில் நேற்று அதிகாலை மயங்கிய நிலையில் மேரி கிடந்துள்ளார். ஹோட்டலில் வேலை பார்த்த சமையல் மாஸ்டர் கார்த்திக் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது, உடலெங்கும் ரத்த கரைகளுடன் அரைகுறை உடைகளுடன் மயக்கமான நிலையில் மேரி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதியில் நின்றிருந்த ஆட்டோவில் 5 பேர் போதை மயக்கத்தில் இருந்துள்ளனர். இதை பார்த்த கார்த்திக் அவர்களிடத்தில் சென்று விசாரித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்துஆட்டோவில் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இருவரும் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் மேரியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர். விசாரணையில் மேரியால் சரியான தகவல்களை கூறமுடியவில்லை. உடல் நிலை சற்று சரியான பிறகு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் மேரியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. தினமும் இரவில் ஆட்டோவில் வந்து கூட்டி செல்வதும் பிறகு காலையில் கொண்டு வந்து இறக்கி விடுவதுமாக இருந்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் அந்த கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த கும்பலைக் கண்டு பிடிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை அரசு மருத்துவமனை சட்டம் ஒழுங்கு காவல் நிலைய போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments