டிரம்ப் அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் புகார் மனு
அமெரிக்காவில் டிரம்ப் அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் புகார் மனு அளித்துள்ளது.
உலக அளவில் வீடியோ பகிர்வு சமூகவலைதளத்தில் புகழ்பெற்று திகழும் டிக் டாக்கை சீனாவின் பைட் டேன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. அந்த செயலிக்கு இந்தியாவில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அமெரிக்காவிலும் நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 10 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் இந்த தடை நடவடிக்கை வருவாய் இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, வாஷிங்டன் பெடரல் நீதிமன்றத்தில் டிக் டாக்கும், பைட் டேன்ஸ் நிறுவனமும் புகார் மனு அளித்துள்ளன.
Comments