சிகரெட் கேட்டு சிறையில் தகராறு : போதை நடிகைகள் மீது புதிய புகார்

0 5550
கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கில், நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கில், நடிகை ராகிணி திவேதியின் ஜாமீன் மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராகிணியும், சஞ்சனா கல்ராணியும் பெண் காவலரிடம் சிகரெட் கேட்டு தகராறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகைகள் சஞ்சனா கல்ராணியும், ராகிணி திவேதியும் பார்ட்டிகளில் சிகரெட், மது, போதைப் பொருட்களை தாராளமாக பயன்படுத்தி வந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமான வழக்கில், கண்காணிப்பில் இருப்பதால், சிறையில் சிகரெட் கிடைக்காமல் தவிப்பதாகவும், ஒரேயொரு சிகரெட்டுக்காவது ஏற்பாடு செய்யுங்கள் என சிறைக்காவலர்களிடம் கெஞ்சியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெண் காவலர்கள் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த லூம் பெப்பர், ராகிணி திவேதிக்கு போதை பொருள் சப்ளை செய்ததை ஒப்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கும் போதை மாத்திரைகளை ராகிணி திவேதிக்கும், அவரது நண்பரான ரவி சங்கருக்கும் பலமுறை வழங்கியதாகவும், ஒரு கிராம் கொக்கைன் 6 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் ராகிணி வாங்கியதாகவும் லூம் பெப்பர் கூறியுள்ளார்.

இதேபோல வைபவ் ஜெயின் என்ற மற்றொரு நபரிடமும் போதை மாத்திரைகள் வாங்கி, ராகிணியும் ரவி சங்கரும் பயன்படுத்தியதை விசாரணையில் போலீசார் உறுதிப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைப்பது சந்தேகமே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, போதைப்பொருள் விவகாரத்தில், கன்னட நடிகர் அகுல் பாலாஜி, தயாரிப்பாளர் சந்தோஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ தேவராஜின் மகன் யுவராஜ் ஆகியோர், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments