புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவின்றி வந்த பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்

0 1638
புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு முன்பதிவின்றி வந்த பக்தர்களை அலிபிரி சோதனை சாவடியில் போலீசார் திருப்பி அனுப்பினர்.

புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு முன்பதிவின்றி வந்த பக்தர்களை அலிபிரி சோதனை சாவடியில் போலீசார் திருப்பி அனுப்பினர்.

திருப்பதியில் இன்று மாலை வருடாந்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிலையில், கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு புரட்டாசி சனிக்கிழமை அன்று 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கான முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்கள் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இது தெரியாமல் கார், இருசக்கர வாகனங்களில் வந்திருந்த வெளிமாநில பக்தர்களை திருமலையின் அடிவாரமான அலிபிரி சோதனை சாவடியில் போலீசார் திருப்பி அனுப்பியதால் ஏமாற்றத்துடன் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments