ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்ட விவகாரம் : கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்கு.

0 1352

ஐக்கிய அரபு அமீரக தூதரக அதிகாரிகள், தூதரகத்தின் வழியே தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்த குரான் பிரதிகள் மற்றும் 18 ஆயிரம் கிலோ பேரீச்சம் பழத்தை பரிசாகப் பெற்றுக்கொண்டது தொடர்பாக கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

கேரள அரசில் சில சக்திவாய்ந்த நபர்கள், சில இடங்களில் விநியோகிக்கும் நோக்கத்துடன், அவற்றை பரிசுகளாகப் பெற்றுள்ளனர் என சுங்கத்துறை கூறியுள்ளது. 

தூதரக அலுவலர்கள் தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கொண்டுவந்ததை, வரி விலக்கு சான்றிதழ் அளித்து மாநில அரசு பெற்றுக் கொண்டதன் மூலம், சுங்கத்துறை சட்டம், பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை மீறியிருப்பது தெளிவாகியுள்ளதாக சுங்கத்துறை கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments