"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
முதன்முறையாக உக்ரைன், அமெரிக்க நாடுகளின் சிறப்பு அதிரடிப் படையினர் கூட்டு ஒத்திகை
அமெரிக்க மற்றும் உக்ரைன் சிறப்பு அதிரடிப்படையினர் முதன்முறையாக கூட்டு ஒத்திகை நடத்தியுள்ளனர்.
ஒத்திகையில் எம்சி 130ஜே, சிவி 22 ஆஸ்பிரே ராணுவ போக்குவரத்து விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஒத்திகையின்போது வானில் மிக உயரத்தில் பறந்த விமானங்களில் இருந்து குதித்து இருநாடுகளின் வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
போலந்து எல்லை அருகே பெலாரஸ்- ரஷ்யா நாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் கூட்டு ஒத்திகை நடத்தி வருகின்றன.
அந்நாடுகளுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், தற்போது உக்ரைன், அமெரிக்க படையினர் ஒத்திகை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
Comments