எப்படியெல்லாம் கல்லா கட்டுறாங்க... ஹனிமூன் பீடா' என்ற பெயரில் விலை 100!

0 4972

திருமணம் போன்ற விஷேச நிகழ்ச்சிகளின் போது, வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் பலருக்கும் உண்டு . நாளைடைவில், வெற்றிலையோடு ‘ஸ்வீட், குல்கந்த், சுபாரி சேர்க்கப்பட்டு பீடா என்று மாறி விஷேச நாள்களில் நம் நாக்குக்கு மணத்தையும் சுவையையும் கொடுக்கின்றன. ஜிகினாசர்தா பீடா, 120 பீடா, மாவா, கல்கத்தா பீடா, தக்கா பீடா, சூப்பர் ஸ்டார் பீடா, ஸ்வீட் பீடா என பீடாக்களில் பலவகை உள்ளன. அந்த வகையில், ஹனிமூன் பீடா என்ற பெயரில் புதிய ரக பீடாவும் லிஸ்டில் இணைந்துள்ளது.

மதுரை மேற்குகோபுர தெருவில் அமைந்துள்ள பீடா கடை 90 கிட்ஸ்கள் முதல் 90வயது முதியவர்கள் வரை ஈர்க்கும் வகையில் , இந்த ரக பீடாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹனிமூன் பீடாவில் மலைத்தேன், குங்குமபூ, குல்கந்து, பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், உலர் பழங்கள் , செரிமானத்திற்கு உதவும் தானியா, சோம்பும், வாசனைக்காக நவ்ரத்னா சட்னி, சில்வர் முலாம் பூசிய ஏலக்காய் ஆகியவை கலந்து செய்யப்படுகிறது. இதனால், ஒரு பீடாவின் விலை 100 என்று விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இது குறித்த விளம்பத்தில் இது தேனிலவு தம்பதியருக்கான ஸ்பெசல் பீடா என தொடங்கி பல வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஆன்லைனிலும் ஹனிமூன் பீடா டெலிவரி செய்யப்படுகிறது. ஹனிமூன் பீடாவில் பயன்படுத்தப்படும் தேன் மேற்குத் தொடர்ச்சி மலையில் நேரடியாக சேகரிக்கப்படுகிறதாம். இதில், பயன்படுத்தப்படும் பொருள்கள் அனைத்தும் மருத்துவம் குணம் நிறைந்தால், பீடாவின் விலையும் அதிகம் என்கிறார்கள்.

சாதாரணமாக ஒரு பீடாவின் விலை 10 ரூபாய் இருக்கும். ஆனால், ஹனிமூன் என்ற ஒற்றை வார்த்தையை உடன் சேர்த்து கல்லா கட்டும் கடைகளை என்ன வென்று சொல்வது?

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments