கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்
கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள், விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் பெரும்பாலானவை, சுமார் 50 ஆயிரம் அளவுக்கு ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும் குறைந்த கட்டண தனியார் பள்ளிகள் என, Cerestra Ventures நிறுவனம் தொகுத்துள்ள விவரங்களில் தெரியவந்துள்ளது.
பள்ளிகளில் கட்டண வசூலுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும், ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் பிற செலவுகளை சமாளிக்க முடியாமலும் குறைந்த கட்டண பள்ளிகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலைமை எப்படி, எவ்வாறு சீரடையும் என தெரியாததால், பள்ளிகளுக்கு நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கத் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் விற்பனை மூலம் சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments