"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பிரதமர் பிறந்தநாள் அன்று அனுமதியின்றி குதிரை வண்டியில் வந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா அன்று அதிகளவில் கூட்டம் சேர்த்து பொதுமக்களுக்கு இடையூராக அனுமதியின்றி குதிரை வண்டியில் வந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது 2 பிரிவுகளின் கீழ் மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்தநாள் அன்று தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு அக்கட்சி தலைவர் எல்.முருகன் குதிரை வண்டியில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டவிரோ தமாக கூட்டம் கூடுவது, தடையை மீறி செயல்படுவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் எல்.முருகன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
Comments