உள்நாட்டு விமான பயணிகளுக்கான தமிழ்நாடு இபாஸ் வசதி இன்று மாலை 6 மணி முதல் திரும்பப் பெறப்படுகிறது - சென்னை விமான நிலையம்

0 2830
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தமிழ்நாடு இபாஸ் (TN e-Pass) பெறும் வசதி இன்று மாலை 6 மணி முதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் தமிழ்நாடு இபாஸ் (TN e-Pass) பெறும் வசதி இன்று மாலை 6 மணி முதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலங்களுக்கு இடையே விமானத்தில் பயணிப்போருக்கு இபாஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் சென்னை விமான நிலையம் வெளியிட்ட பதிவில், இன்று மாலை 6 மணி முதல் அந்த வசதி திரும்பப் பெறப்படுவதாகவும், இனிமேல் இபாஸை பயணத்துக்கு முன்பு அதற்கென அறிவிக்கப்பட்ட இணையத்தில் விண்ணப்பித்து பெறும்படி பயணிகளை கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments