தமிழகம் முழுவதும் மூன்றாவது சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இன்று செயல்படாது என்று உணவுத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்திலுள்ள குடும்ப அட்டைதாரார்களுக்கு வீடு தோறும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறை நாள்களான ஜூலை 10, ஆகஸ்ட் 7 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் கடைகள் அனைத்தும் செயல்பட்டன.
இதற்கு பதிலாக, நவம்பர் மாதம் வரை மூன்றாவது சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மூன்றாவது சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு | #Tamilnadu | #RationShop https://t.co/SAEMICA2Gn
— Polimer News (@polimernews) September 19, 2020
Comments