அதிமுக செயற்குழுக் கூட்டத்தை வரும் 28ம் தேதி நடத்துவதென உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு

0 1740
அதிமுக செயற்குழுக் கூட்டத்தை வரும் 28ம் தேதி நடத்துவதென உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சென்னையில் தலைமைக் கழகத்தில் நேற்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கட்சி ரீதியாக மாவட்டங்களைப் பிரிப்பது, வழிகாட்டும் குழு அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியாக 67 மாவட்டங்கள் உள்ள நிலையில், மேலும் சில மாவட்டங்களை பிரிக்க வேண்டுமென கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கூட்டத்தைத் தொடர்ந்து, முதலமைச்சரை அவரது இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் சிலர் சந்தித்து சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments