பி.எம்.சி வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் ரூ 100 கோடி ரூபாய் மதிப்புடைய 3 ஓட்டல்களின் சொத்துகள் முடக்கம்
பி.எம்.சி வங்கியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய மூன்று ஓட்டல்களின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் HDIL என்ற கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகள் ராகேஷ் குமார் வாத்வான், வங்கி மேலாளர் வார்யம் சிங் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாய் தாமஸ் ஆகியோர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில் நூறு கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.
இதுவரை மொத்தம் 360 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
Comments