மேற்குவங்கம், கேரளா மாநிலங்களில் 9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது - என்ஐஏ

0 1455
மேற்குவங்கம், கேரளா மாநிலங்களில் 9 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது - என்ஐஏ

மேற்குவங்கம், கேரளா மாநிலங்களில் அல்கொய்தா பயங்கரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் முர்சிதாபாத்,  எர்ணாகுளத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக  தேசிய புலனாய்வு படைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு இன்று அதிகாலை சோதனை நடத்தி,  முர்சிதாபாத்தில் 6 பேரையும் எர்ணாகுளத்தில் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் நாட்டு துப்பாக்கிகள்  வெடிகுண்டு தயாரிக்கும் ஆலோசனை அடங்கிய புத்தகம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

நிதி திரட்டும் முயற்சியில் 9 பேரும் ஈடுபட்டதாகவும், சிலர் டெல்லி சென்று ஆயுதங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments