வியாழன் கிரகத்தில் மிகப் பெரிய புயல் உருவானது
வியாழன் கிரகத்தில் மிகப் பெரிய அளவில் புயல் உருவாகியிருப்பதையும், அங்கு சிவப்புப் பள்ளத்தின் அளவு குறைந்திருப்பதும் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவின் ஹப்பிள் தொலைநோக்கி வியாழன் கிரகத்தை படம் பிடித்துள்ளது. அந்தப் படத்தில் கிரகத்தின் வடக்குப் பகுதியில் மிகப் பெரிய அளவில் புயல் உருவாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புயல் மணிக்கு 560 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதும், பிரகாசமான வெள்ளை நிறத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் வியாழனின் தெற்குப் பகுதியில் காணப்படும் கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படும் சிவப்புப் பள்ளத்தாக்கின்அளவு குறைந்து வருவதும் அதில் தெரியவந்துள்ளது.
Comments