சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை

0 1943
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்ததால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

சென்னையில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது.

கிண்டி, ராயப்பேட்டை, வடபழனி, அண்ணா நகர்,வேளச்சேரி உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. மேலும் புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், அம்பத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

இந்த கனமழையின் காரணமாக சென்னையில் இரவு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கோவை, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments