தூய்மையில்லாத முகக்கவசம் அணிய வேண்டாம் - இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை

0 3830

தூய்மை இல்லாத முகக்கவசம் பயன்படுத்தினால், கொரானா தொற்று ஏற்படும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ சங்க துணை தலைவர் ஜெயலால் , கொரோனா தொற்றை தடுக்க அணியும் முகக்கவசத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முககவசம் வைரஸ் உள்ளே செல்லாத அளவில் தடுக்க கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவர், எந்த இடத்தில் இருந்தாலும் தூய்மையான முககவசங்களை அணிய வேண்டும் என்றார்.

ஊரடங்கில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் அலட்சியம் காட்டாமல் முககவசம் அனைவரும் அணிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments