கூகுள் பிளே ஸ்டோருக்கு மீண்டும் திரும்பியது Paytm
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பே.டி.எம். செயலி, இன்று பிற்பகல் வாக்கில் நீக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில், மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும்,(Apple App Store) தடையின்றி, பேடிஎம் செயலி கிடைப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு அறிமுகம் ஆன பேடிஎம் செல்போன் செயலி, மாதந்தோறும், சுமார் 5 கோடி பயனாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, பேடிஎம் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியது.
விதிமீறலில் ஈடுபடும் ஆன்லைன் சூதாட்டங்கள், விளையாட்டுகளை, பேடிஎம் ஊக்குவிக்கப்பதாகவும், கூகுள் பிளேஸ் ஸ்டோர் கொள்கை முடிவுகளுக்கு இது எதிரானது என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, கூகுள் நிறுவனத்துடன், பேடிஎம் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதன் முடிவில், மீண்டும் கூகுள் பிளேஸ் ஸ்டோருக்கு, "பேடிஎம் செயலி" திரும்பியது... ஏற்கனவே உள்ளது போன்று, புதிதாக டவுன்லோடு செய்யவும், அப்டேட் செய்யவும் இயலும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments